Wednesday, June 25, 2008

எங்கே இந்தக் கவிஞர்கள்?

என்னுடய ஒரு பதிவிற்கு ரமேஷ் வைத்யா என்கிற ஸோமா வனதேவதா பின்னூட்டமிட்டிருந்தார். திங்கள் இரவு ஊருக்கு புறப்படும் நேரம் அவரது பின்னூட்டத்தைப் பார்த்ததும் மனது பழைய நினைவுகளில் மூழ்க.. நான் எப்போதோ எழுதி வைத்திருந்த "என்னைக் கவர்ந்த கவிதைகள்" என்ற நோட்டை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்.

ரவி சுப்பிரமணியன், கல்யாண்ஜி, ஸோமா வனதேவதா என்று ஆரம்பித்து அவ்வப்போது எழுதும் எல்லாரது கவிதைகளும் அதில் இருந்தது. சிலரது கவிதைகளைப் படிக்கும் போது, இவர் இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்கிறார், ஏதாவது தொகுப்பு வெளியிட்டிருக்கிறாரா என்று பலப்பல கேள்விகள் மனதில்.


எனக்கு கவிதைகளுடன் பெரிய பரிச்சயம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. எதோ லைட் ரீடிங் என்பதாகவே என் வாசிப்பு இருந்திருக்கிறது.

கீழே உள்ள கவிதையைப் பாருங்கள்..


"நீ என்னை நானுன்னை நினைக்கின்ற நேரங்கள்

வேறில்லை ஒன்றெனினும் வேறாவோம் நாம் என்பேன்

நீயின்னும் என்றன்னை நீயற்ற நானாக

வேஎண்ணும் காரணத்தால்"


இது தீபப்பிரகாசன் என்பவர் கணையாழியில் எழுதிய கவிதை. எப்போதும் என் நினைவில் மனப்பாடமாக இருக்கும் இந்தக் கவிதை வந்த ஆண்டு என்ன தெரியுமா? 1971 டிசம்பர்! (நான் பொறக்கவே இல்லை!)

இந்த கவிஞரின் வேறு கவிதைகள் யாருக்காவது தெரியுமா? ஏதாவது தொகுப்பு வெளியிட்டிருக்கிறாரா?


ரவி சுப்பிரமணியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் அவ்வப்போது வருகிறது.. அவரது பல கவிதைகளின் வெறித்தனமான ரசிகன் நான். சொல்லப் போனால்...

கடிதம்

கவிதை

எழுத்து

எல்லாந்தான் இருக்கு நல்லா,,

வயிறடங்குமா

பாராட்டில் பட்டயத்தில்.

எழுத்துக்கு சரஸ்வதி

சோத்துக்கு..?

என்ற அவரது கவிதையைப் படித்துவிட்டு என் சென்னைக் கனவை மூடி வைத்துவிட்டு வேலை தேட ஆரம்பித்தவன் நான்.. ! அவரது கவிதைகள் இன்றும் எனக்கு டானிக் போல!

சரி இப்போது எனக்கு பிடித்த இன்னொரு கவிதை..


இதை எழுதியவர் இராசரத்னா. இவர் யார் இப்போது எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது!

அவ்வளவுதான்


தனியே சிரிக்கலாம்

தூங்காது

இரவு முழுவதும்

கனவு காணலாம்

கொஞ்சம்

கவிதை மாதிரி எழுதலாம்

பொய்.. பொய்யாய்ப்

புரட்டிப் புகழலாம்.

எப்போதாவது

தொட்டுக் கொள்ளலாம்.

முடிவில்

தாடி வளர்க்கலாம்.

வேறு

என்ன இருக்கிறது

.

.

.

காதலில்?

(அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்.. எல்லாரும் தயாராக இருக்கலாம்!!)

18 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//அவ்வளவுதான்




தனியே சிரிக்கலாம்
தூங்காது
இரவு முழுவதும்
கனவு காணலாம்
கொஞ்சம்
கவிதை மாதிரி எழுதலாம்
பொய்.. பொய்யாய்ப்
புரட்டிப் புகழலாம்.
எப்போதாவது
தொட்டுக் கொள்ளலாம்.
முடிவில்
தாடி வளர்க்கலாம்.
வேறு
என்ன இருக்கிறது
.
.
.
காதலில்?//

மிக மிக ரசித்தேன்... கச்சிதமாகவும் காரமாகவும் உள்ளது...

VIKNESHWARAN ADAKKALAM said...

அப்பாடா.... நான் தான் பஷ்ட்டு....

anujanya said...

கே.கே.,

எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? உங்கள் வருகைக்கு நன்றி. என்றேனும் ஒருநாள் இத்தகைய பதிவில் எனது கவிதையும் இடம் பெறும் என்னும் நம்பிக்கை உள்ளது.
Meanwhile you are rocking.

அனுஜன்யா

வெண்பூ said...

// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்..//

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...நடத்துங்க, நடத்துங்க

சின்னப் பையன் said...

//// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்..//

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...நடத்துங்க, நடத்துங்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒருத்தரை கண்டுபிடிச்சிட்டீங்க... மீதி ஆளையும் கண்டுபிடிக்க வாழ்த்துகள்..

Anonymous said...

கிருஷ்னா,

இது போல நல்ல கவிதைகளும், எழுதியவர்களும் அதிகம் பேரைச் சென்றடையவில்லை.

எழுதுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.

சென்ஷி said...

கவிதையெல்லாம் அருமையா இருக்க்குங்க.

மிகுதி தொகுப்புகளை விரைவில் வெளியிடவும்..

Sen22 said...

கவிதை எல்லாமே நல்லா இருந்தது...


Senthil,
Bangalore

அகரம் அமுதா said...

வாழ்த்துக்கள் பரிசல். மிகநல்ல முயற்சி. கவிதைகளைத் தொகுத்து வழங்கிய விதம் அருமை. தொடர்ந்து இதுபோன்ற வற்றையும் செய்யுங்கள்.

☼ வெயிலான் said...

நிறைய கவிஞர்களை, கவிதைகளை எதிர்நோக்குகிறோம்.

rapp said...

கவிதைனா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு கிருஷ்ணா நான். அதனால அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேன்.

பரிசல்காரன் said...

@ விக்னேஸ்வரன்..

உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்!

@ அனுஜன்யா
//எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?//

இன்னும் முடியவில்லை. உங்களைப் பிரிய மனமில்லாததால் ஒரு பிரவுசிங் சென்டர்-இலிருந்து எழுதுகிறேன்..

//you are rocking. //

நன்றி.. முன்பொரு முறை அண்ணன் வடகரை. வேலன் `நீங்க நல்ல பார்ம்-ல இருக்கீங்க' என்றார். இப்போ, உங்களது இந்தப் பாராட்டு. நிச்சயம் இது என்னை ஊக்குவிக்கும்! (வாலி என்ன சொல்லிருக்கார்-ன்னா ... ம்ம்ம்ம்... இங்க வேண்டாம் என்னோட அவியல்-ல சொல்றேன்!)

பரிசல்காரன் said...

நன்றி வெண்பூ & ச்சின்னப்பையன்..

@ கயல்விழி முத்துலட்சுமி..

கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ.. ஒரு நல்ல கவிதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிற சந்தோஷத்திற்காக எழுதுகிறேன்!

@வடகரை வேலன்
//இது போல நல்ல கவிதைகளும், எழுதியவர்களும் அதிகம் பேரைச் சென்றடையவில்லை//

ஆமாண்ணா, மெயினா அதுக்காகத்தான் எழுதறேன்!

நன்றி சென்ஷி, sen22, அகரம்.அமுதா & வெயிலான்

@rapp

//கவிதைனா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு கிருஷ்ணா நான். அதனால அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேன்//

rapp.. கண்டிப்பா இது உங்கள மாதிரி அலுங்களுக்குத் தான். ஏன்னா, நீங்களாவது கிலோ என்ன விலை-ன்னு கேக்கறீங்க. (அப்போ வாங்கற ஆர்வம் இருக்குதானே?) சிலபேர் கடைப்பக்கமே வரதில்லையே!

ராமலக்ஷ்மி said...

//இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்.. //

ஆகா, அருமையான முயற்சி.

நல்ல கவிதைகளைத் தேடி எடுத்து தேனிலே குழைத்துக் கொடுக்கிறேன் என்கிறீர்கள் கசக்குமா என்ன?

VIKNESHWARAN ADAKKALAM said...

//உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்! //

என் வயசு என்னனு நினைக்கிறிங்க...

தமிழ் பொறுக்கி said...

நீ என்னை நானுன்னை நினைக்கின்ற நேரங்கள்
வேறில்லை ஒன்றெனினும் வேறாவோம் நாம் என்பேன்
நீயின்னும் என்றன்னை நீயற்ற நானாக
வேஎண்ணும் காரணத்தால்

அருமையான பொருள் பொதிவு
இதே போன்று பிரபலமாகாத கவிஞரின் வரிகள்..

நேரம் பார்த்தோம்
நேரில் பார்த்தோம்
பக்கத்தில் வந்தோம்
பன்னிரண்டு ஆனோம்...
இப்போது நேரம் பார்க்க
நேரமே இல்லை....

பரிசல்காரன் said...

நன்றி ராமலட்சுமி மேடம், விக்கி & தமிழ்பொறுக்கி!

விக்கி.. உங்க வயசு என்னான்னா.. ம்ஹூம், தனியா சொல்றேனே..