Monday, July 28, 2008

என் முதல் புகைப்பட அனுபவம்

எனக்கு புகைப்படங்கள் மீதும், புகைப்படக் கலை மீதும் சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததுண்டு. ஒரு நல்ல கேமரா வாங்க வேண்டும், புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே (இப்போதும்) புகைப்படக் கலைஞர்கள், அல்லது அதில் ஆர்வமிருப்பவர்களைக் கண்டால் `வாங்கறதுன்னா, என்ன கேமரா வாங்கலாம்?’ என்று கேட்டு வைப்பது என் வழக்கம்!

நான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, (1997) கேமரா வாங்க ஆயத்தமாகி, இதேபோல விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே `பாரிஸ் கார்னர்’ என்ற `டியூட்டி பெய்ட் ஷாப்’பில் `YASHIKA-ELECTRO 35’ செகண்ட் ஹேண்ட் (தமிழில் என்னவென்று சொல்ல??) கேமரா ஒன்று விற்பனைக்கு இருந்தது. தளி ரோட்டில் மணி என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். (இருக்கிறார்) அவரிடம் அந்தக் கேமரா பற்றிக் கேட்டபோது, `நிறையபேர் மொத மொதல்ல வாங்கணும்ன்னு நினைக்கற கேமரா எலக்ட்ரோ 35 தான். வாங்கிக்கோ’ என்றார். வாங்கினேன். 2400 ரூபாய்! காசு அளவாக இருந்தது. கேமராவும், ரோலும் வாங்கவே கையைக் கடித்தது. வாங்கிவிட்டு நேராக எனது மாமா வீட்டிற்கு சென்றேன். (அப்போதும், இப்போதும் எனக்கு குழந்தைகளை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.) அங்கே எனது மாமாவின் மகனை விதவிதமாகப் படம் பிடித்தேன். ஒரு ரோல் முழுவதும் பிடித்து, நேராக மணியிடம் சென்றேன். கேமராவை வாங்கிப் பார்த்து `நல்லாயிருக்கு’ என்றவர், ஃபோட்டோ எடுத்த விபரங்களைச் சொன்னதும்

“என்ன ஃப்ளாஷ் யூஸ் பண்ணின?” என்று கேட்டார்.

”ஃப்ளாஷ்னா?”

அப்போது அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வை இன்னும் கண்ணில் இருக்கிறது!

“ஃப்ளாஷ் தனியா வாங்கணும். இல்லீன்னா வீட்டுக்குள்ள எடுக்கறது, லைட் வெளிச்சத்துல எடுக்கறதெல்லாம் வராது”

நேஷனல் ஃப்ளாஷ் வாங்கச் சொல்லி அறிவுரை தந்தார். 700 ரூபாய் ஆகும் என்றார். என்னிடம் கொஞ்சம் கூட காசில்லை.

“அப்ப ஃப்ளாஷ் வாங்கற வரைக்கும் இதை உபயோகிக்க முடியாதா?”

“சூரிய வெளிச்சத்துல எடுக்கலாம்” என்றார். அவரிடமே மறுபடி ஒரு ரோல் வாங்கிக் கொண்டுபோய், அதே மாமா பையனை சூரிய வெளிச்சத்தில் சில ஃபோட்டோக்கள் எடுத்தேன்.

அவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேலிருந்து கண்ணாடி ஓட்டிலிருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அவனை அதற்கு நேராக உட்கார வைத்து, என் பாட்டுக்கு எடுத்துத் தள்ளினேன். அப்போது அவன் மேலே பார்க்க, வெளிச்சத்துக்கு கண் கூசி மூடிக் கொள்ள ஒரு அருமையான படம் வந்தது. (அந்தப் புகைப்படத்தைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!)

அப்போது ஜூனியர் விகடன் `விஷுவல் டேஸ்ட்’ என்று புகைப்படங்களை அனுப்பச் சொல்லி அறிவிப்பு வந்து. உடனே உற்சாகமாகி (ஆஹா, நம்ம கேமரா வாங்கினது அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு!!) அந்த புகைப் படத்தை அனுப்ப, விஷுவல் டேஸ்ட் வெளியான முதல் வாரத்திலேயே அந்தப் புகைப்படம் ஜூ.வி.யில் வெளியானது.

அந்த சந்தோஷமே மாறாத நிலையில், இன்னொன்றும் நடந்தது. விஷுவல் டேஸ்ட் என்று வாரா வாரம் வெளியாகும் வாசகர்கள் எடுத்த புகைப்படங்களிலிருந்து, மாதத்திற்கு ஒரு சிறந்த புகைப்படத்தை ஏதேனும் பெரிய கேமராமேன்களைக் கொண்டு தெரிவு செய்து, அதை `சூப்பர் டேஸ்ட்’ என்று அந்த வாசகரின் பேட்டியோடு வெளியிடுவார்கள். அது முதல் மாதம் என்பதால் கேமரா ஜாம்பவானான பி.சி. ஸ்ரீராமை தேர்வு செய்யச் சொல்லியிருந்தார்கள். அவர் என்னுடைய புகைப்படத்தை சூப்பர் டேஸ்ட் என்று தேர்வு செய்திருந்தார்!

அந்த வாரத்தில் ஜூ.வி-யின் பின்னட்டையில் ஒரு பக்கம் பி.சி.ஸ்ரீராமும், ஒரு பக்கம் நானும் நடுவில் நான் எடுத்த அந்தப் புகைப்படமும் வெளியானது. அப்போது உடுமலையில் எந்தக் கடையைப் பார்த்தாலும் ஜூ.வி. தொங்கிக் கொண்டிருப்பதை ஒரு பார்வை பர்த்துவிட்டுத்தான் செல்வேன். நிறைய பேர் `இந்த வார ஜூ.வி.ல உங்க ஃபோட்டோ வந்திருக்குல்ல?’ என்று கேட்பார்கள். அந்த ஒரு வாரத்துக்கு நான் நடக்கவேயில்லை! பறந்துகொண்டிருந்தது போலவே இருக்கும்!

இப்படி நான் ஃப்ளாஷ் வாங்கக் காசில்லாமல் சூரிய வெளிச்சத்தில் எடுத்து, பரிசு வாங்கியதை மறக்கமுடியுமா?

----------------------------------------

சரி... இது எனது முதல் புகைப்படம். இதே போல உங்களுக்கும் எத்தனையோ `முதல்’ இருக்கும். அதில் சுவாரஸ்யமான `முதல்’ ஒன்றை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு தொடர் விளையாட்டாக இதை அறிவிக்கிறேன். ஆனால் இது எங்கெங்கோ சென்றால் தொடரே காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. (வடகரை வேலனின் காத்திருந்த காதலி இப்போது எங்கிருக்கிறாள்?) கீழே குறிப்பிட்ட வரிசையில் இது பாஸாக வேண்டும் என்றும் நானே அறிவித்து விடுகிறேன்! அதற்குப் பிறகு தொடர்வதும், நிறுத்துவதும் சென்ஷியின் விருப்பம்!

1. கோவி.கண்ணன்
2. வடகரைவேலன்
3. முத்துலெட்சுமி-கயல்விழி
4. லதானந்த்
5. கயல்விழி
6. வெயிலான்
7. ஆயில்யன்
8. தாமிரா
9. குசும்பன்
10. வெண்பூ
11. வெட்டியாபீசர் (rapp)
12. கிரி
13. VIKNESWARAN
14. புதுகை. எம்.எம்.அப்துல்லா
15. ஜெகதீசன்
16. ச்சின்னப்பையன்
17. ஜோசப் பால்ராஜ்
18. சென்ஷி


(இந்த வரிசை மாறாமலிருக்க இதை எல்லோருமே குறிப்பிடுங்கள்.. ப்ளீஸ்)


சில யோசனைகள்...

# என் முதல் டீச்சர்
# என் முதல் வாகனம்
# என் முதல் ஸ்கூல்
# என் முதல் ரயில் பயணம்
# என் முதல் காதல்
# என் முதல் வாரிசு
# என் முதல்....

இப்படி எது வேண்டுமானாலும். இதே மாதிரிதான் என்றில்லாமல் `நான் முதலில் வாங்கிய அடி’ `நான் முதலில் போலீஸ் ஸ்டேஷன் போன அனுபவம்’ அப்படியும் இருக்கலாம்!

கோவி.கண்ணன் ஜி... ரெடி.. ஸ்டார்ட் மீஜிக்.. ஆரம்பிங்க..

36 comments:

ஆயில்யன் said...

//செகண்ட் ஹேண்ட் (தமிழில் என்னவென்று சொல்ல??) //

மறுவிற்பனையில் என்ற சொல் நல்ல பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :))

ஆயில்யன் said...

//என்ன ஃப்ளாஷ் யூஸ் பண்ணின?” என்று கேட்டார்.

”ஃப்ளாஷ்னா?”
//

சமீபத்தில் நானும் இப்படித்தான் ஒரு பிரபலமான போட்டோ பதிவரிடம் கேள்வி கேட்டு அவர் இப்பொழுதெல்லாம் என்னிடம் இது சம்பந்தமாக பேசவே யோசிக்கிறார் :))))))))))))))))))

ஆயில்யன் said...

// என் முதல் காதல்//

ஆஹாஆஆஆஆஆஆஆஆஆஅ

சென்ஷி இதெல்லாம் மாத்த நிறுத்தமாட்டரய்ய்யா! சும்மா கிடந்த சிங்கத்தை சீண்டுறீங்கன்னு நினைக்கிறேன்! என்ன அதகளமாகப்போகுதோ.....!!!!!

:)))))))))))))))))

கிரி said...

கே கே காத்திருந்த காதலி மாதிரி ஆகாது எனக்கு கதை எழுத தான் தெரியாது..ஆனா இந்த மேட்டர் அடித்து தூள் பண்ணிடலாம் ..என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. பார்ப்போம் எத்தனையோ எழுதறோம் இதை எழுத மாட்டோமா! :-)

nagoreismail said...

படமும் பதிவும் கூட நல்லா தான் இருக்கு.

"அப்போது அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வை இன்னும் கண்ணில் இருக்கிறது!"
சிறிய செய்திகள் கூட நமக்கு தெரியாமல் இருக்கலாம், சந்தர்ப்பம் அமையாததால், அல்லது அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இல்லாததால், தெரியாவிட்டாலும் கேவலமாக எல்லாம் பார்க்காமல் சொல்லி கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து

"வெளிச்சத்துக்கு கண் கூசி மூடிக் கொள்ள ஒரு அருமையான படம் வந்தது"
உண்மையிலேயே இது அருமையான படம் தான்

என்னுடைய முதல் இதோ -
இன்று தான் முதன் முதலாக உங்கள் பதிவை படிக்கிறேன், நல்ல அனுபவம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டு போட்டி வந்தது.. முதல் போட்டி இதுக்கு முன்னால வந்ததான்னு தெரியல.. நீங்களே நிறைய பேரக்கூப்பிட்டுடீங்க.. காத்திருந்த காதலி தொடர்கதை என்பதால் தொடரவேண்டும் இதுல அவரவர் அனுபவம் தானே... எப்ப முடியுதோ அப்ப போடறேன் இல்லாட்டி ஏற்கனவே போட்ட பதிவு இருக்கு http://click1click.blogspot.com/2007/11/blog-post_17.html இந்தாங்க..

வெண்பூ said...

//அந்த ஒரு வாரத்துக்கு நான் நடக்கவேயில்லை! பறந்துகொண்டிருந்தது போலவே இருக்கும்!
//

எனக்கும் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சி என்னோட "கடைசி ஆசை" கதையை எழுதி அது நல்லா இருக்கு என்று எல்லோரும் (என் தங்கமணி உட்பட) பாராட்டிய பிறகு இதே போலதான் உணர்ந்தேன்.

நல்ல தொடர் இது. எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.. இப்போதிலிருந்தே யோசிக்க ஆரம்பிக்கிறேன்.

ஜெகதீசன் said...

//
செகண்ட் ஹேண்ட
//
மறு விற்பனை ??

ஜெகதீசன் said...

//
வடகரை வேலனின் காத்திருந்த காதலி இப்போது எங்கிருக்கிறாள்?
//
கே.ஆர்.எஸ் கையில் காத்திருக்கிறாள்...
:P

அதேபோல "அறிவுப்பூர்வமான/ அறிவியல்ப் பூர்வமான கேள்வி பதில்" சங்கிலியும் லக்கியின் பதில் மற்றும் கேள்விக்காகக் காத்திருக்கிறது....
:)

புதுகை.அப்துல்லா said...

அய்யய்யய்ய வரவர இந்த தொடர் பதிவு தொல்லை தாங்க முடியலப்பா!!!
உள்ள பதிவே ஒழுங்கா எழுதத் தெரியாம முழி பிதுங்குது.இதுல இது வேற..

சரி சொன்னது அண்ணே பரிசல்ங்கறதுனால ரெடியாயிருக்கேன்.

புதுகை.அப்துல்லா said...

VIKNESWARAN அண்ணே நீங்க எழுதி முடிச்சதும் எனக்கு கரெக்டா தெரியப்படுத்திருங்கண்ணே.

பரிசல்காரன் said...

@ ஆயில்யன்
//மறுவிற்பனையில்//

சபாஷ்! (இது தமிழ் அல்ல!!!)

@ கிரி

//ஆனா இந்த மேட்டர் அடித்து தூள் பண்ணிடலாம்//

கலக்குங்க!

@ nagoreismail
//என்னுடைய முதல் இதோ -
இன்று தான் முதன் முதலாக உங்கள் பதிவை படிக்கிறேன், நல்ல அனுபவம் //

நன்றி!! (நல்லவேளை.. ரெண்டுநாள் முன்னடி படிச்சிருந்தா நம்ம பிளாக் பக்கமே வந்திருக்க மாட்டீங்க!)

@ முத்துலெட்சுமி-கயல்விழி

//ஏற்கனவே போட்ட பதிவு இருக்கு //

கண்ணன் ஜி.. ஏற்கனவே போட்டதில்லாம, புதுசா சொல்லணும்ன்னு ஒரு கண்டிஷனைப் போட்டு வுடுங்க!

@ வெண்பூ

//நல்ல தொடர் இது. எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.. இப்போதிலிருந்தே யோசிக்க ஆரம்பிக்கிறேன்.//

மீன்குஞ்சுக்கு நீந்த...-ன்னு ஒரு பழ்மொழி இருக்கு தெரியுமா?

பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

ஆயில்யன் முதல் பின்னூட்டத்துலேயே சொன்னத பாக்கலியா நீங்க?

//அதேபோல "அறிவுப்பூர்வமான/ அறிவியல்ப் பூர்வமான கேள்வி பதில்" சங்கிலியும் லக்கியின் பதில் மற்றும் கேள்விக்காகக் காத்திருக்கிறது....//

அதுக்குமுன்னாடியே என்னோட சிவாஜி வாயிலே ஜிலேபி" லக்கிலுக் கையிலே இருக்கு!

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
//அய்யய்யய்ய வரவர இந்த தொடர் பதிவு தொல்லை தாங்க முடியலப்பா!!!
உள்ள பதிவே ஒழுங்கா எழுதத் தெரியாம முழி பிதுங்குது.இதுல இது வேற..//

இது நட்பு வட்டாரத்துக்குள்ள ஒரு பகிர்தல்தானே அப்துல்லா? இதுக்குப் போயி கோவிச்சுக்கலாமா?

//சரி சொன்னது அண்ணே பரிசல்ங்கறதுனால ரெடியாயிருக்கேன்.//

அது!

Anonymous said...

என்னோட மொத படப்பொட்டியும் (ஹி...ஹி...இப்ப வரைக்கும்) எலக்ட்ரோ 35 தான் க்ருஷ்ணா!

நல்லதா ஒண்ணு வாங்கச் சொன்னேனே? என்னாச்சு?

rapp said...

ஆஹா நானா, என்னோட முதல் கவிதை என்ற உன்னதப் பதிவை படிச்சப்புறமுமா, இம்புட்டு தெகிரியம் உங்களுக்கு. சரி இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எதாவது புதுசா ட்ரை பண்ணி, எப்படி நொந்தேன்னு போடறேன், அப்போ பாக்கலாம் உங்க ரியேக்ஷன

rapp said...

அடடே ஜூவி விஷயம் சூப்பர். கொஞ்சம் லேட்டுத்தான், இருந்தாலும் வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

வெயிலான்..

நேர்ல சொல்றேன்!

@ rapp

தயாரா இருக்கோம்!

வாழ்த்துக்கு நன்றி!

rapp said...

krishna,
உங்களுக்கு சென்ஷி அண்ணன்
http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_26.html
பதிவில் ஒரு எச்சரிக்கை போட்டிருக்கேன், பார்த்து பதவிசா நடந்துக்கங்க :):):)

சின்னப் பையன் said...

முடியல... முடியவேயில்லை....

ஏங்க.. முதல் காதல் - இதெல்லாம் இப்போ சொல்லி, நான் வீட்டிலே ##$# வாங்கணும்னு ஆசையா?... நல்லாவே இருங்க.....

VIKNESHWARAN ADAKKALAM said...

அடடே சபையில் என் பேரும் அடிபடுதே... எங்க தாத்தா வீட்டுக்கு கூப்பிட்டிருக்கிறார்... நான் வருவதற்கு எப்படியும் 10 லட்சம் வருசம் ஆகும்....
அதுமட்டும் இல்லாமல் நான் 13வது ஆள்... 4ஆம் நம்பர் எனக்கு ஒத்துக்காதுனு டூரியான்பழ சித்தர் சொல்லி இருக்காரு...

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, என்ன மாதிரி சின்ன பையனையுமா இதுல இழுத்துவிடணும்? நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க, உங்க அளவுக்கு என்னால எழுத முடியுமான்னு தெரியல, முயற்சி செய்யிறேன்.

ராஜ நடராஜன் said...

யாசிகா மற்றும் நேசனல் சரியான ஜோடிதான்.ஏமாற்றம் தராத துவக்கவிழாவுக்குத் தகுந்த காமிரா.ஆனால் 35MM ஆட்டத்துல அடிச்சு ஆடிகிட்டிருந்த ஆளு நிக்கான் தான்.அப்புறம்தான் இப்பத்து தல கெனான் கூட.

லக்கிலுக் said...

நண்பரே!

நீங்கள் கூப்பிடாமலேயே நான் ஆட்டையில் கலந்துகொண்டேன் :-)

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

மாட்டுங்க!

@ விக்கி

அந்த டூரியான்பழசித்தர் தலைல இடிவிழ!

@ ஜோசப் பால்ராஜ்

இப்படியெல்லாம் சொல்லி வயசக் குறைச்சுக்கறதா?

@ ராஜநடராஜன்

நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க!


@ லக்கிலுக்

அட! இன்ப அதிர்ச்சியா இருக்கே!
மிக்க மகிழ்ச்சி!

VIKNESHWARAN ADAKKALAM said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

VIKNESWARAN அண்ணே நீங்க எழுதி முடிச்சதும் எனக்கு கரெக்டா தெரியப்படுத்திருங்கண்ணே.//

ஓகே சொல்லிடலாம் ஒரு 4 பதிவு இலவசமா எழுதி கொடுக்க முடியுமா லஞ்சமாக... :)))

சென்ஷி said...

உங்க முதல் பரிசு பெற்ற புகைப்படத்தைப் பார்த்தேன். ரொம்ப அழகாயிருந்தது. கலக்கல்..

அடுத்த டேக் தானே... போட்டா போச்சு. என்னது நான் 18வது ஆளா.. சார் இது என்ன கொடும சார் இது...! :( என் முறை வர்றதுக்கு நான் இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணும்

ராமலக்ஷ்மி said...

அட எனக்குக் கூட முதல் படம் யாஷிகா-D-யில்தான். தந்தையின் காமிரா, அண்ணன் கையில் தந்து அனுப்பினான் பள்ளி இறுதி ஆண்டு விழா சமயத்தில்.

பரிசு வாங்கித் தந்த உங்களது முதல் படம் அருமை. இப்போ பிட் போட்டியில் கலக்குவதற்கெல்லாம் இடப் பட்ட பிள்ளையார் சுழி அல்லவா:)?

Anonymous said...

அட நீங்களும் உடுமலைப்பேட்டை-தானா? குசும்பு கும்மி அடிக்கும்போதே நெனச்சேன்....இவுரு நம்ம ஊராத்தான் இருக்கணும்னு....வாழ்க !!!

Thamira said...

அன்புள்ள பரிசல்!

1. உங்கள் ஜூவி பரிசுபெற்ற புகைப்படம் அருமை. வாழ்த்துக்கள்!

2. உங்கள் அனுபவமும் பிரமாதம்.

3. இவ்வளவு சீக்கிரம் உங்க ஆட்டையில் என்னையும் சேத்துக்கொண்டதுக்கு
தேங்ஸு.. தேங்ஸு (உண்மையில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. சில சீனியர்களும் லிஸ்டில் இருக்கக் கண்டேன். நன்றி பரிசல்) பாருங்கள்.. என்ன எழுதலாம்னு இப்பவே சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன். ( நான் எதையுமே 'பிளான்' பண்ணிதான் செய்வேன்)

4. வெண்பூ ://எனக்கும் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சி என்னோட "கடைசி ஆசை" கதையை எழுதி அது நல்லா இருக்கு..// அவசரமாக முதலில் இத படித்துவிட்டு 'முதல் அனுபவத்'திற்கு பதிலாக 'கடைசி ஆசை' என தலைப்பை மாற்ற வருகிறாரா என பயந்து போய்விட்டேன். ஸாரி வெண்பூ.

5. பட்டியலில் இருந்து 'முதல் காதல்' ஐ தூக்க ஏதும் வழி உள்ளதா என நிர்வாகம் ஆலோசிக்குமா?

6. சென்ஷி : //அடுத்த டேக் தானே... போட்டா போச்சு. என்னது நான் 18வது ஆளா..// முக்கியமான ஆளுங்கலாம், கடைசியாதான் வருவாங்க தல. அல்லாங்காட்டி கூட்டம் கலைஞ்சுடும்.

Athisha said...

உங்க ஜீவி பரிசு படம் பார்த்தேங்க ரொம்ப நல்லாருக்கு

நீங்க கொஞ்சம் முயற்சி பண்ணா பெரிய போட்டோ கிராபரா வர வாய்ப்பிருக்குங்க

கயல்விழி said...

பரிசல்

என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டதுக்கு மிக்க நன்றி :) :)

இன்றே எழுதுகிறேன், நேற்று நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என்பதால் உங்கள் பதிவை கவனிக்கவில்லை, மன்னிக்கவும்.

பரிசல்காரன் said...

@ சென்ஷி

உடனே, உடனே உங்களை கலாய்க்க வேண்ஆமென்றும், அதுமில்லாம நான் ஆரம்பிச்சு, நீங்க முடிக்கறா மாதிரி இருக்கணும்ன்னுதான் 18வதா போட்டேன்!

2 ராமலட்சுமி

நன்றிங்கக்கா!

@ மகேஷ்

உடுமலையில் நீங்க எங்கே? இப்போ சிங்கையில் குடியேறிவிட்டீர்களா?

@ தாமிரா

விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி!

@ அதிஷா

மிக்க நன்றி. முயல்கிறேன்!

@ கயல்விழி

சரி!

அப்புறம் எல்லோருமே Defaultஆக குறிப்பிட்டிருக்கும் `என்னையும் எழுத அழைத்ததற்கு நன்றி... என்னையெல்லாம் பெரியவங்க கூட சேர்த்துட்டீங்களே' போன்ற கமெண்டுகளுக்கு...

எனக்கு தினமும் பின்னூட்டம் போடும் உங்களை, ஏதோ ஒரு வகையில் கௌரவப்படுத்தி, நம் எல்லோரையும் ஒரே குடும்பமாக்கும் முயற்சியேயன்றி வேறில்லை.

அப்புறம், எழுத்துல நீ சீனியரு, நான் நேத்துவந்தவன் கதையெல்லாம் எடுபடவே படாது!

அன்னைக்கு பதிவு நல்லாயிருந்தா, அவங்கதான் ஸ்டார்! சீனியரென்ன, ஜூனியரென்ன?

Anonymous said...

பரிசலாரே, நான் உடுமலையில் சிவசக்தி காலனி வாசம். வீடு இருக்கு ஆனா நாங்க யாரும் அங்க இல்ல. ஒரு 3 வருஷமா சிங்கை வாசம். எனக்கு தெரிஞ்சு இங்க ஒரு 10 உடுமலைகாரங்க இருக்காங்க. உங்க "புகழை" பரப்பிகிட்டு இருக்கேன். (தனியா கமிஷன் வெட்டிரணும்....ஆம்ம்மா :) ரென்டு வலைப்போ ஆரம்பிச்சும் தொடர முடியறதில்லை. நேரப் பற்றாக்குறை. பயணம் அதிகம். கூடிய விரைவில் தொடர்ந்து எழுத ஆசை.

பரிசல்காரன் said...

@ மகேஷ்

//பரிசலாரே, நான் உடுமலையில் சிவசக்தி காலனி வாசம். வீடு இருக்கு ஆனா நாங்க யாரும் அங்க இல்ல.//

ஓக்கே..ஓக்கே... சாவி எங்க இருக்கு? (ஹி..ஹி..)

//ஒரு 3 வருஷமா சிங்கை வாசம். எனக்கு தெரிஞ்சு இங்க ஒரு 10 உடுமலைகாரங்க இருக்காங்க. //

சந்தோஷமா இருக்கு! யாராரு?

//உங்க "புகழை" பரப்பிகிட்டு இருக்கேன். (தனியா கமிஷன் வெட்டிரணும்....ஆம்ம்மா :)//

கண்டிப்பா!! உங்களுக்கில்லாமயா? ரிட்டர்ன் டிக்கெட்டும் சேர்த்து புக் பண்ணீடுங்க. வந்து கமிஷன் தர்றேன்!

//ரென்டு வலைப்போ ஆரம்பிச்சும் தொடர முடியறதில்லை.//

வலைப்போ ஆரம்பிச்சா அப்படித்தான். வலைப்பூ ஆரம்பிச்சுப் பாருங்க!

//நேரப் பற்றாக்குறை. பயணம் அதிகம். கூடிய விரைவில் தொடர்ந்து எழுத ஆசை//

எனக்கும்!

(எனக்கு ஒரு மெயில தட்டிவிட முடியுமா? மெய்ல் ஐ.டி. என் ப்ரொஃபைலில் உள்ளது)

தமிழன்-கறுப்பி... said...

அப்ப நீங்க பல வருசமா படமெடுக்கிற ஆள்னு சொல்லுங்க...

தமிழன்-கறுப்பி... said...

கணக்கு பாக்கப்போனா உங்க வயசுக்கு நான் உங்களை அங்கிள்னு கூப்பிடலாம்னு நினைக்கறேன்...